முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர்..!! காலில் அணிந்திருந்த ஷூவை கழட்டி அடிக்க சென்ற காவலர்..!! அதிர்ச்சி வீடியோ..!!

The incident of taking off the shoe and going to beat it has caused a shock among the general public.
04:44 PM Sep 04, 2024 IST | Chella
Advertisement

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் நிலையில், இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, காவல் நிலையத்தில் காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், புறக்காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் காவேரி என்பவர், தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, அதற்கான பணத்தை கொடுக்காமல், கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கூறிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கடந்த 2ஆம் தேதி ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, பணத்தை நாளை தருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு மீண்டும் உணவு சாப்பிட ஓட்டலுக்கு வந்த காவேரி, சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார். அப்போது கடை உரிமையாளர் முத்தமிழ், நிலுவை தொகை கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த எஸ்எஸ்ஐ காவேரி, முத்தமிழை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். மேலும், பணத்தை தூக்கி வீசிவிட்டு, கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரத்தில், காலில் தான் அணிந்திருந்த ஷூவை கழட்டி அடிக்க சென்றுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் தடுத்ததால், அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது‌. மேலும், காவலர் சீருடையில் இருக்கும் ஒருவர், ஓட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்து, பணத்தை வீசிவிட்டு, காலில் இருந்த ஷூவை கழற்றி அடிக்கச் சென்ற சம்பவம் பெரும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : வாரத்திற்கு 5 பெண்கள்..!! அதுவும் இந்த மாநிலத்தில் தான் அதிகமாம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tags :
சிசிடிவிசிறப்பு உதவி காவல் ஆய்வாளர்தருமபுரி
Advertisement
Next Article