முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கொடூர சம்பவம்!… இரண்டு குழுக்கள் தாக்கிக்கொண்டதில் 113 பேர் உயிரிழப்பு!…. நைஜீரியாவில் ராணுவ வீரர்கள் குவிப்பு!

09:20 AM Dec 26, 2023 IST | 1newsnationuser3
Advertisement

நைஜீரியாவின் மன்ஷு கிராமத்தில் இரண்டு கும்பலை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு நடத்திய ஆயுத தாக்குதலில் 113 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் வடமத்திய மாகாணமாக பிளாட்டியூ உள்ளது. அங்குள்ள மன்ஷு கிராமத்தில் இருவேறு கும்பல்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்தநிலையில் இந்த கருத்து வேறுபாடு கோஷ்டி மோதலாக உருவானது. இரண்டு கும்பலை சேர்ந்த நூற்றக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கையில் கிடைத்த ஆயுதங்களை பயன்படுத்தி கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 113 பேர் பலியாகி உள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினர் உதவியை நாடினர். இதனால் மன்ஷு கிராமத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags :
113 people dead113 பேர் உயிரிழப்புgroups attackedNigeriaஇரண்டு கும்பலை சேர்ந்தவர்கள் தாக்குதல்நைஜீரியாராணுவ வீரர்கள் குவிப்பு
Advertisement
Next Article