For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"எப்போதான் மாறுமோ..?" தங்கை மற்றும் காதலன் கௌரவக் கொலை.! போலீசில் சரணடைந்த அண்ணன்.!

03:21 PM Nov 23, 2023 IST | 1newsnationuser4
 எப்போதான் மாறுமோ     தங்கை மற்றும் காதலன் கௌரவக் கொலை   போலீசில் சரணடைந்த அண்ணன்
Advertisement

பாகிஸ்தானை சேர்ந்த காதல் ஜோடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாஃபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முலாசீம் ஹூசைன். தங்கை ஜைதூன் பிபீ ஃபயாஸ் ஹுசைன் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு முலாசீம் ஹூசைன் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் தங்களது காதலில் உறுதியாக இருந்துள்ளனர்.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது தங்கை மற்றும் அவரது காதலன் ஃபயாஸ் ஹுசைன் ஆகிய இருவரையும் கோடாரியா ல்கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கொலை செய்த கோடாரியுடன் காவல்துறையிடம் சென்று சரணடைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காவல்துறையின் விசாரணையில் குடும்ப கவுரவத்திற்காக இருவரையும் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். சொந்த அண்ணனே தங்கை மற்றும் அவரது காதலனை வெற்றி படுகொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement