முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

போக்குவரத்து துறை Vs போலீஸ் துறை..! உள்துறை & போக்குவரத்து செயலாளர் திடீர் ஆலோசனை!!

03:18 PM May 25, 2024 IST | Mari Thangam
Advertisement

போக்குவரத்து துறைக்கும், காவல்துறைக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வுகாண, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி உடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்தார்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்றும் வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது என்றும் போக்குவரத்து துறை விளக்கம் அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து, சீட் பெல்ட் அணியாதது, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது, அதிக பயணிகளை ஏற்றியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, அரசுப் பேருந்துகளுக்கு  தமிழக போலீஸார் அபராதம் விதிக்கத் தொடங்கினர். இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி உடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags :
cm stalincm tamilnaduHome secretarytn governmenttn policetnsetcTransport Secretary
Advertisement
Next Article