மூட்டு வலியால் நடக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்போ வாரம் இரு முறை இதை செய்து குடியுங்க.. உங்களுக்கே வித்யாசம் தெரியும்..
பொதுவாக நமது முன்னோர், 90 வயதில் கூட ஆரோக்கியமாக நடந்தது உண்டு. ஆனால் நாகரீகம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், 30 வயதை தாண்டுவதற்கு முன்பு, இடுப்பு வலி, கால் வலி, மூட்டு வலி என பல வலிகள் ஏற்படுகிறது. இதற்க்கு முக்கிய காரணம், கால்சியம் சத்து குறைபாடு தான். சத்துக்கள் நிறைந்த உணவுகளை விட்டுவிட்டு, நாம் சீக்கிரம் தயாராகும் உணவுகளை சாப்பிடுவதே இன்றைய காலகட்டத்தில் பெரிய பிரச்சனை. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது மட்டும் இல்லாமல், எலும்பு தேய்மானம் இளம் வயதிலேயே ஏற்படுகிறது.
குறிப்பாக பெண்களை பொறுத்தவரை பிரசவத்திற்கு பிறகு, ஆரோக்கியமான உணவு இல்லாமல் உடலில் உள்ள வலிமை அனைத்தையும் இழந்து விடுகின்றனர். குறிப்பாக இடுப்பு மற்றும் மூட்டு வலி இளம் வயதில் வந்து விடுகிறது. இந்த மூட்டுவலி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருவதாக பல வகையான எண்ணெய் மற்றும் மருந்துகள் சந்தையில் விற்கப்படுகிறது. ஆனால் அது எதுவும் நிரந்தர தீர்வு அளிக்காது. இதனால் நீங்கள் இது போன்ற மூட்டு வலியை குணப்படுத்த, நம் தமிழர்களின் பாரம்பரிய வைத்திய முறைகளில் ஒன்றான ஆட்டுக்கால் சூப் செய்து சாப்பிடலாம்.
இதன் மூலம், வலுவிழந்த மூட்டுகளை வலிமையாக வைக்க உதவுகிறது. இதற்க்கு முதலில் நீங்கள், 2 வெள்ளாட்டுக்காலை நங்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், 10 பல் பூண்டு, சிறிது மிளகு, 10 சின்ன வெங்காயம் மற்றும் 1 தக்காளியை மிக்ஸி ஜாரில் பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு, அடுப்பில் ஒரு குக்கர்வைத்து, 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது ஒரு கொத்து கறிவேப்பிலை, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர், நாம் நறுக்கி வைத்துள்ள ஆட்டுக்காலை போட்டு நன்கு வதக்கி விடுங்கள். இப்போது அதில், ஒரு கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடி, நான்கு விசில் விடவும். பிரஷர் இறங்கிய பின்னர், மூடியை திறந்து சிறிது மல்லித் தழை தூவினால் சுவையான ஆரோக்கியமான ஆட்டுக்கால் சூப் ரெடி.. இந்த சூப்பை வாரம் இருமுறை குடித்து வந்தால், மூட்டுகளின் வலிமை அதிகரித்து, மூட்டு தேய்மானம், மூட்டு வலி குணமாகும்.