மோர் குடித்தால் சர்க்கரை வியாதி குணமாகுமா.? எப்படி பயன்படுத்தலாம்.!?
தற்போதுள்ள காலகட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் பலரையும் நோய் பாதிப்புக்குள்ளாக்குகிறது. ஊட்டச்சத்து இல்லாத உணவு முறையினால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் மிகவும் குறைந்து வருகிறது. குறிப்பாக தற்போது பலருக்கும் சர்க்கரை வியாதி பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பலருக்கும் இந்த நோயின் பாதிப்பு ஏற்படுகிறது.
சர்க்கரை வியாதி வந்து விட்டாலே வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்து தான் ஆக வேண்டும் என்று பலரும் கருதி வருகின்றனர். ஆனால் இதை உடற்பயிற்சியின் மூலமும், உணவு கட்டுப்பாடுகளின் மூலமும் எளிதாக கட்டுக்குள் கொண்டு வரலாம். குறிப்பாக இந்த வீட்டு வைத்திய முறையை செய்து பாருங்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உடனடியாக கட்டுக்குள் வரும்.
தேவையான பொருட்கள்: கொய்யா இலை, எலுமிச்சை, மோர், மிளகு, கிராம்பு
செய்முறை: முதலில் எலுமிச்சம் பழத்தை சுடு தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். பின்பு கொய்யா இலைகளை நன்றாக கழுவி மிக்ஸி ஜாரில் போட்டு மிளகு, கிராம்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு ஊற வைத்த எலுமிச்சையை தோலுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இந்த சாறை மோரில் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் உடனடியாக கட்டுக்குள் வரும்.