'JAMAAT-E-ISLAMI'மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.! மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.!
JAMAAT-E-ISLAMI தீவிரவாத அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(Amit Shah) தனது X வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்திருக்கிறது. இந்த இயக்கம் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அதன் தடை மேலும் 5 வருடத்திற்கு நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் என்று அறிவித்துள்ளது. இந்த அமைப்பு முதன்முதலாக பிப்ரவரி 28, 2019 அன்று தடை செய்யப்பட்டது.
இது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் அமித் ஷா தனது X வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். அவரது பதிவில் பாரதப் பிரதமர் மோடி தீவிரவாதத்திற்கு எதிராக எந்த சகிப்புத்தன்மையும் காட்டக்கூடாது என்ற கொள்கையை வகுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு மேலும் 5 ஆண்டுகளுக்கு சட்ட விரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு முதன்முதலாக தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு இந்திய இறையாண்மை ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு தொடர்ந்து ஆபத்தாக விளங்குவதால் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுகிறது என தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தீவிரவாதத்திற்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. மேலும் தீவிரவாத இயக்கங்களும் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட புதிய குற்றவியல் தண்டனை சட்டங்களில் தீவிரவாதம் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டு அதற்கான கடுமையான தண்டனையும் புதிய சட்ட வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.