For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மஞ்சள் நிற பற்கள் வெள்ளையாக மாற, வீட்டிலேயே பேஸ்ட் தயாரிக்கலாம்.. எப்படி தெரியுமா?

home made tulsi paste for white teeth
04:54 AM Dec 16, 2024 IST | Saranya
மஞ்சள் நிற பற்கள் வெள்ளையாக மாற  வீட்டிலேயே பேஸ்ட் தயாரிக்கலாம்   எப்படி தெரியுமா
Advertisement

நாம் என்ன தான் தினமும் பல் தேய்த்தாலும் பலருக்கு பல் வெள்ளையாக இருக்காது. மாறாக சற்று மஞ்சள் நிறமாக இருக்கும். இப்படி மஞ்சள் நிறமாக இருக்கும் பற்களை வெண்மையாக்க பல பேஸ்ட் வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பேஸ்டை தேய்த்தால் நமது பல் வெள்ளை ஆகி விடும் என்ற நம்பிக்கையில் நாமும் கூடுதல் செலவு செய்து அந்த பேஸ்ட்டை பயன்படுத்தினால் என்ன பலனும் இருக்காது. அதிக கெமிக்கல் நிறைந்த பேஸ்டை அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு பதில், இயற்கையான பொருள்களை வைத்து வீட்டிலேயே பேஸ்ட் அல்லது பற்பொடி தயாரிக்கலாம்.

Advertisement

வாய் ஆரோக்கியத்தின் அடிப்படையே பற்களை சுத்தமாக வைத்திருப்பது தான். அந்த வகையில், உங்கள் பற்கள் வெண்மையாக இருக்க இயற்கையான பொருள்களை பயன்படுத்தி நாம் தயாரிக்கும் பேஸ்ட், பற்களில் துவாரங்களை உண்டு செய்யாது. இப்போது இயற்கையான பேஸ்டை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்பதை பற்றி பார்ப்போம். இதற்க்கு முதலில் நீங்கள் ​துளசி இலைகளை உலர வைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை நீங்கள் காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். வேண்டும் போது, ஒரு டீஸ்பூன் அளவு பொடியை எடுத்து அதில் கடுகு எண்ணெய் அல்லது தேங்காயெண்ணெயில் சேர்த்து குழைத்து பிரஷ் கொண்டு பற்களை தேய்க்கலாம். இந்த பேஸ்டை நீங்கள் வாரம் 1-2 முறை பயன்படுத்தினால் போதுமானது. உங்கள் பற்களின் மஞ்சள் கரை மாறி, பளிச்சென்று மாறிவிடும்.

துளசியில் இருக்கும் ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் வாயில் இருக்கும் பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. இதனால் பல் வலிக்கு துளசி நல்ல பலன் தரும். மேலும் வாய்ப்புண்களை குணப்படுத்தும். தேங்காயெண்ணெயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அகற்றும் பண்புகள் உள்ளதால், வாய் துர்நாற்றம், பல் சொத்தை மற்றும் ஈறுநோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.

Read more: கொண்டைக்கடலை நல்லது தான், ஆனால் இவர்கள் எல்லாம் சாப்பிடவே கூடாது..

Tags :
Advertisement