பெற்றோர்களே.! குழந்தைகள் உயரமாக வளர இந்த ஊட்டச்சத்து பவுடர் ட்ரை பண்ணி பாருங்க.!?
பொதுவாக குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது பல பெற்றோரின் ஆசையாக இருந்து வருகிறது. ஆனால் தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு வீட்டிலேயே தயாரித்த ஊட்டச்சத்து மாவு டிரை பண்ணி பாருங்க. இது குழந்தைகளை ஆரோக்கியமாக இருக்க செய்வதோடு, உயரமாகவும் வளர வைக்கும்.
ஹோம் மேட் ஊட்டச்சத்து பவுடர் தயாரிக்க தேவையான பொருட்கள்
பாதாம் பருப்பு - 100 கிராம், மக்கானா - 200 கிராம், எள்ளு - 50 கிராம், பெருஞ்சீரகம் - 100 கிராம்
ஒரு கடாயில் எள், பெருஞ்சீரகம், மக்கானா, மற்றும் பாதாம் பருப்புகளை தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஆற வைத்து நன்றாக அரைத்து காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் தினமும் காலை அல்லது இரவில் பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கலாம். ஆறு மாதம் வரை இந்த ஊட்டச்சத்து பவுடரை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊட்டச்சத்து மாவில் உள்ள பாதாம் பருப்பு நினைவாற்றல் அதிகரிப்பதோடு, இதில் உள்ள கொழுப்பு சத்து உயரத்தை அதிகரிக்க செய்கிறது. மக்கானா என்ற தாமரை விதையில் கால்சியம் அதிகமாக உள்ளதால் எலும்புகளை பலப்படுத்தி வளர வைக்கிறது. எள்ளில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள செல்களை வளர வைக்கிறது. பெருஞ்சீரகத்தில் கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இந்த கலவையை பாலில் கலந்து கொடுக்கும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகரித்து, உயரத்தையும் அதிகரிக்க செய்கிறது.