முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வீட்டுக்கடன் வாங்கியவர்கள் நிம்மதி..!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

RBI Governor Shaktikanta Das said that there is no change in the repo interest rate. Accordingly, he explained that the interest rate for short-term loans will continue at 6.5 percent.
10:38 AM Jun 07, 2024 IST | Chella
Advertisement

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவிகிதத்திலேயே தொடரும் என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் தனிநபர் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இன்றி, பழைய நிலையே நீடிக்கும். மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தொடர்ந்து 8-வது முறையாக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக சக்தி காந்த தாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், “நிதிக் கொள்கைக் குழு 4:2 பெரும்பான்மையுடன் பாலிசி ரெப்போ விகிதத்தை 6.5% ஆக தொடர முடிவு செய்தது. இதனால், நிலையான வைப்புத்தொகை வசதி (SDF) விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Read More : பங்குச்சந்தை முதலீட்டில் ரூ.30 லட்சம் கோடியை இழக்க பிரதமர், அமித்ஷாவே காரணம்..!! குண்டை தூக்கிப்போட்ட ராகுல் காந்தி..!!

Tags :
BANKRBI
Advertisement
Next Article