புனித நீராடும் பண்டிகை..!! நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உள்பட 46 பேர் உயிரிழப்பு..!! பீகாரில் நேர்ந்த சோகம்..!!
பீகார் மாநிலத்தில் ஜீவித்புத்ரிகா என்ற பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறு நீர் நிலைகளில் புனித நிராடிய 46 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை, பீகார் மாநிலம் முழுவதும் இந்த ஜீவித்புத்ரிகா பண்டிகை கொண்டாடப்பட்டது. 15 மாவட்டங்களில் உள்ள குளங்கள், ஏரிகள், ஆறுகளில் ஏராளமான மக்கள் புனித நீராடிய போது, 37 குழந்தைகள் உள்பட 46 பேர் பல்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த ஜீவித்புத்ரிகா பண்டிகை, பெண்கள், தங்கள் குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டி விரதமிருந்து கொண்டாடி, தாயும் குழந்தைகளும் நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். இந்த நிகழ்வின்போது ஏராளமானோர் ஒரே நேரத்தில் நீர்நிலைகளில் புனித நீராடியபோது, பலரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதில் கவலைத் தரும் தகவல் என்னவென்றால், யாரின் நலத்தை விரும்பி இந்த பண்டிகைக் கொண்டாடப்படுகிறதோ, அந்தக் குழந்தைகள்தான் அதிகம் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
Read More : நாய்கள் ஏன் இரவு நேரத்தில் மட்டும் அதிகம் குரைக்கிறது தெரியுமா..? இவ்வளவு விஷயம் இருக்கா..?