For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2-ம் கட்ட தேர்தல்... தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை...! முழு விவரம்...

05:30 AM Apr 25, 2024 IST | Vignesh
2 ம் கட்ட தேர்தல்    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை     முழு விவரம்
Advertisement

தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

18-ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக முதற்கட்ட தேர்தலில் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

2-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டத்தில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகள், கர்நாடகத்தின் 14 தொகுதிகள், ராஜஸ்தானின் 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தின் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் ஏப்ரல் 24 முதல் 26 வரை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தாளவாடி மலையில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு டாஸ்மாக் கழகத்தின் சில்லறை விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தமிழ்நாடு-கர்நாடக எல்லைக்கு அருகே அமைந்துள்ள கடையும், அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கடையும் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே போல கேரளா தேர்தலையொட்டி, குமரி, தேனி, கோவை எல்லை மாவட்டங்களிலும், கர்நாடகா தேர்தலையொட்டி ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய எல்லை மாவட்டங்களிலும் டாஸ்மாக் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Advertisement