Holiday | தமிழ்நாட்டில் மார்ச் 8ஆம் தேதி பொதுவிடுமுறை..? தமிழ்நாடு அரசு தீவிர ஆலோசனை..!!
ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தசி திதியைதான் நாம் சிவராத்திரி என்று எடுத்துக்கொள்கிறோம். அதுவே மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதியைதான் நாம் மகாசிவராத்திரியாக எடுத்துகொள்கிறோம். மார் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் தான் ரம்பிக்கிறது. அதாவது தேய்பிறை சதுர்த்தசி திதி ஆரம்பிக்கிறது.
இந்நிலையில், மார்ச் 8ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிவராத்திரி அன்று சிவன் கோயில்களில் மட்டுமின்றி குலதெய்வ கோயில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள். இதற்கிடையே, விரைவில் தேர்தல் வரவுள்ளதால், சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில், மார்ச் 8ஆம் தேதி விடுமுறை அளிக்க திமுக அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது. ஆனால், இது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என்று கூறப்படுகிறது.