Holiday | குட் நியூஸ்..!! நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்படுவதுண்டு. அந்த வகையில், நாளை மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான விழா மார்ச் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் தேதி மயானக்கொள்ளை விழாவும், மார்ச் 12ஆம் தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நாளை மார்ச் 14ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 23ஆம் தேதி பணிநாளாக செயல்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.