ஜாலி...! ஜனவரி 10-ம் அனைத்து பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை...! எந்த மாவட்டத்தில் தெரியுமா...?
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா முன்னிட்டு ஜனவரி 10-ம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ஜன.10-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு ஜன 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறை திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு இயங்கும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜன 25-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.