முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விஜயகாந்தின் கழுத்தில் துளை..? அதிர்ச்சியில் தொண்டர்கள்..!! மியாட் மருத்துவமனை பரபரப்பு விளக்கம்..!!

04:51 PM Nov 30, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு, சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த் மருத்துவமனை சேர்க்கப்பட்டதால் தொண்டர்கள் கவலை அடைந்த நிலையில், நவ. 23ஆம் தேதி மியாட் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் நன்றாக ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக மியாட் மருத்துவமனையில் இருக்கும் விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாகவும் அவருக்கு திடீரென 24 மணி நேரமாக உடல்நிலை சீராக இல்லை என்றும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதுகுறித்து நேற்று மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும், அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திடீரென தீவிர இருமல் தொந்தரவால் அவதிப்படும் விஜயகாந்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு பைப்பாப் மாஸ்க் எனப்படும் அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் மூலம் கூடுதல் ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்துக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

டிரக்கியாஸ்டமி என்பது கழுத்தில் துளையிட்டு மூச்சுவிட சிரமப்படுவோரின் நுரையீரல் குழாயுடன் செயற்கை சுவாசத்தை இணைப்பதுதான். இந்த தகவலை அறிந்த தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்த் ரசிகர்களும் வேதனை அடைந்து அச்சமடைந்தனர். இந்நிலையில், விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை என்பது தவறான தகவல் என மியாட் மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. இதை அந்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். விஜயகாந்துக்கு வழக்கமாக நுரையீரல் பிரச்சனைக்கு வழங்கப்படும் சிகிச்சையே வழங்கப்படுகிறது என்றார்.

Tags :
தேமுதிக தலைவர்மியாட் மருத்துவமனைவிஜயகாந்த்
Advertisement
Next Article