இந்தியாவிற்குள்ளும் நுழைந்த HMPV வைரஸ்..!! 8 வயது குழந்தை பாதிப்பு..!! பீதியில் மக்கள்..!!
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தற்போது இந்தியாவிற்குள்ளும் நுழைந்துவிட்டது. பெங்களூரில் முதல் HMPV கேஸ் பதிவாகி உள்ளது.
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. மீண்டும் கொரோனா போன்ற வைரஸ் வந்துவிட்டது. லாக்டவுன் போடப்போகிறார்கள். நிலைமை மோசமாக போகிறது என்றெல்லாம் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட தொடங்கிவிட்டன. HMPV வைரஸ் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சிகளும் வைரலாகி வருகிறது.
HMPV வைரஸ் என்பது கொரோனா போலவே மூச்சுக்குழலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும். அதாவது, இதுவும் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். சீனாவின் வடக்கு பகுதிகளில் இது அதிகம் பரவி வருகிறது. குறிப்பாக, 14 வயதுக்கு குறைவான வயது கொண்டவர்களை அதிகமாக இந்த வைரஸ் தாக்குகிறது.
சீன அதிகாரிகளும், உலக சுகாதார மையமும் பயப்படும் அளவிற்கு இது பெரிய பிரச்சனை இல்லை. இதை பார்த்து கொரோனா போல அச்சப்பட வேண்டாம். இது சாதாரண மழைக்கால, குளிர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு போன்றதுதான் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான், சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தற்போது இந்தியாவிற்குள்ளும் நுழைந்துள்ளது. பெங்களூரில் முதல் HMPV கேஸ் பதிவாகி உள்ளது. 8 வயது குழந்தை ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.