தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! அகவிலைப்படி அதிரடி உயர்வு..!!
2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவித்தார்.
இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயரும். இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு ரூ.2846.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 46% அகவிலைப்படி 01.01.2024 முதல் 50% ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு தொகை அந்த மதமே வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண்டில் இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 1.1.2024 முதல் அகவிலைப்படியை 9% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அடிப்படை ஊதியம் அகவிலை ஊதியத்தில் 239% ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் ஜனவரி மாதம் முதல் 6 மாத நிலுவைத் தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Read More : வாட்ஸ் அப்பில் பிறந்த தேதி கட்டாயம்..!! இவர்கள் இனி பயன்படுத்த முடியாது..!! மெட்டா நிறுவனம் அதிரடி..!!