முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடித்தது ஜாக்பாட்..!! ’Avengers Doomsday’ படத்தில் நடிக்கிறார் தனுஷ்..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

There are reports that actor Dhanush will star in Avengers Doomsday.
11:21 AM Aug 07, 2024 IST | Chella
Advertisement

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

சமீபத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ராபர்ட் டவுனி ஜூனியர் மீண்டும் அவெஞ்சர்ஸ் படத்தில் நடிக்க இருப்பதாகவும், ஆனால் அயர்ன் - மேன் கதாபாத்திரமாக இன்றி டாக்டர் டூம் எனப்படும் வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மார்வெல் தயாரிப்பில் அடுத்தடுத்து 2 படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

2026ஆம் ஆண்டு மே மாதம் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படமும், 2027 மே மாதம் அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ் படமும் வெளியாக உள்ளது. கடந்த 2018இல் ரூஸோ பிரதர்ஸ் இயக்கிய அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு பிறகு எந்த எவெஞ்சர்ஸ் படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், அடுத்த அவெஞ்சர்ஸ் படத்திற்கு உலகளவில் ரசிகர்களை ஈர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

மார்வெல் படங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதை கருத்தில் கொண்டு நடிகர் தனுஷை இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ரூஸோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சிறிய காட்சி என்றாலும் தனுஷின் நடிப்பை படக்குழுவினர் உட்பட அனைவரும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : BREAKING | திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து..!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

Tags :
Avengers Doomsdaycinemadhanush
Advertisement
Next Article