For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Tirupati: உலக புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிய காரணம் இது தான்..!

08:33 AM Feb 17, 2024 IST | 1newsnationuser5
tirupati  உலக புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிய காரணம் இது தான்
Advertisement

Thirupathi: பொதுவாக திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு அனைவராலும் எளிதில் சென்று கடவுளை தரிசனம் செய்ய முடியாது. ஏழைகள் முதல் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் திருப்பதி ஏழுமலையான் நினைத்தால் மட்டுமே இக்கோயிலுக்கு நம்மால் செல்ல முடியும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த கடவுளாக இருந்து வருகிறார். திருப்பதி சென்றாலே வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள் கணக்கில் கூட காத்திருந்து பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

Advertisement

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளில், சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்த்ரி, அஞ்சனாத்த்ரி, வ்ருஷபாத்ரி, நாராயணத்ரி, வெங்கடாதிரி போன்ற ஏழு மலைகளுக்கும் அதிபதியாக வெங்கடாசலபதி இருப்பதால் ஏழுமலையான் என்று அழைக்கப்பட்டு வருகிறார். சாதாரண நாட்களில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பக்தர்களும் விசேஷ நாட்களில் 5 லட்சத்திற்கு மேலான பக்தர்களும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசித்து வருவதால் உலகிலேயே பணக்கார கோயில் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து வருகிறது.

மலைப்பிரதேசங்களில் கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் குளுமையான சுற்றுசூழலில் அமைந்துள்ள திருப்பதி கோயிலின் திருவுருவச் சிலை எப்போதுமே 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்திலேயே இருந்து வருகிறது. அதிகாலை 4.30 மணியிலிருந்து பல குளிர்ந்த பொருட்களால் அபிஷேகம் செய்தாலும் கடவுளின் திருவுருவச் சிலை எப்போதும் சூடாகவே இருந்து வருகிறது. கடவுளுக்கு அணியப்படும் நகைகளும் தொட்டாலே கொதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் மர்மமாகவே இருந்து வருகிறது.

ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு சீனாவில் இருந்து பல வாசனை திரவியங்களும், வாசனை பொருட்களும், ஐரோப்பாவில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜாக்களும், ஸ்பைனிலிருந்து குங்கும பூவும், நேபாளத்தில் இருந்து கஸ்தூரி போன்ற பொருட்கள் பக்தர்களால் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு உலகப் புகழ் பெற்ற கோயிலாக விளங்குகிறது.

இக்கோயிலின் சிறப்பாக கருதப்பட்டு வருவது கடவுளுக்கு அபிஷேகம் செய்யும்போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் என்று நம்பப்பட்டு வருகிறது. மேலும் ஆனந்த நிலையம் என்று அழைக்கப்பட்டு வரும் கருவறை விமானத்தை எங்கிருந்து தரிசனம் செய்தாலும் ஏழுமலையானை தரிசனம் செய்த பலன் கிடைப்பதாக பக்தர்கள் கருதி வருகின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஏழுமலையானை நாட்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்தாலும் பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்பதால் இக்கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

English summary
This is the reason why devotees flock to the world-famous Tirupati Venkateswara Temple.

Read More: காதலியின் ஆசைக்காக கோயில் கட்டி வழிபட்டு வந்த ராஜேந்திர சோழன்.! இக்கோயில் எங்கு அமைந்துள்ளது.!?

Tags :
Advertisement