குளத்தில் மிதந்து வரும் தீராத நோய்களை திர்க்கும் திருநீர்.! இக்கோயில் எங்கு உள்ளது தெரியுமா.!?
மடவிளாகம் என்ற ஊரில் அமைந்துள்ளது பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில். இக்கோயில் 1000 முதல் 1500 ஆண்டுகள் வரை பழமையான சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்து வருகிறது. பச்சை நிற ஓட்டுடன் சிவன் காணப்படுவதால் இவரை பச்சோட்டு ஆவுடையப்பன் என்று தான் அழைக்கின்றனர். ஆனால் ஒரு சில கல்வெட்டுகளில் பச்சையோட்டு அருளப்பன் என்று உள்ளது.
கோயிலின் பின்பக்கம் சிவன் தன் நகத்தால் கீரியே சுனை ஒன்றை உருவாக்கியுள்ளார். நிகபுஷ்பகரணி என்று அழைக்கப்படும் இந்த சுனை(குளம்) காவிரியைப் போன்ற பெருமை வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. ஒருமுறை இந்த குளத்தில் ஒரு சொம்பு பாத்திரத்தில் விபூதி மிதந்து வந்துள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு குடத்தில் மிதந்து வந்த விபூதி தற்போது சுருங்கி சுருங்கி சொம்பு பாத்திரம் வடிவத்திற்கு மாறிவிட்டதாம். எங்கும் கிடைக்காத அறுமருந்தாக இக்கோயிலின் விபூதி, ஊர் மக்களால் கருதப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு பல நோய்களை தீர்க்கும் மருந்தாக இந்த விபூதி இருந்து வருகிறது.
இதை நோய் பாதிப்புள்ள இடத்தில் பூசி வந்தாலோ அல்லது சிறிது எடுத்து சாப்பிட்டாலோ உடலில் உள்ள நோய்கள் மேஜிக் போல மறைந்துள்ளன என்று சொல்லப்பட்டு வருகிறது. இதற்காகவே இக்கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் குவிந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.