திருமண தடை, நாக தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவற்றை நீக்கும் அற்புத திருக்கோயில்.! எங்கு உள்ளது தெரியுமா.!?
தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம் என்ற திருக்கோயில். ராகு பகவானுக்கு என்று தனி திருக்கோயில் இங்கு மட்டும்தான் உள்ளது. ராகுவினால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் அற்புத திருக்கோயிலாக இது கருதப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருநாகேஸ்வரம் கோயிலின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
இக்கோயிலின் வரலாறாக கூறப்பட்டு வருவது தேவர்கள் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்கும் போது ராகு அசுரனாக மாறி அமிர்தத்தை அருந்தினார். இதை அறிந்த மகாவிஷ்ணு கையில் இருந்த ஆயுதத்தால் ராகுவை தாக்கும் போது தலை தனியாக உடல் தனியாக பிரிந்தது. ஆனால் அமிர்தம் அருந்திய காரணத்தால் தலையில் மட்டும் உயிர் இருந்தது. மனம் வருந்திய ராகுவின் தலை சிவபெருமானை வேண்டியது. இதனால் சிவபெருமான் மனமுருகி ராகுவின் தலைக்கு பாம்புவின் உடலை பொருத்தினார். இவ்வாறு ஆதிசேஷனாக உருமாறிய ராகு, பூமியை தாங்கிக்கொண்டிருந்த போது சோர்வடைந்து சிவபெருமானை வேண்டினார்.
ஆதிசேஷனாகிய ராகுவிற்கு காட்சியளித்த சிவபெருமான், வில்வம் விழுந்த இடமான திருநாகேஸ்வரம் சென்று வழிபட சொன்னார். இதன்படி ஆதிசேஷன் திருநாகேஸ்வரம் சென்று ஈஸ்வரனை வழிபட்டு சக்தி பெற்றார். ஆதிசேஷனாகிய ராகுவிற்கு சக்தியளித்த திருநாகேஸ்வரம் ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் ராகு தோஷம், மாங்கல்ய தோஷம் திருமண தடை, நாக தோஷம், களத்து தோஷம் போன்றவை நீங்கும் என்பதை கோயிலின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மேலும் இக்கோயிலில் 12 தீர்த்தங்கள் உள்ளது. தங்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று இக்கோயிலுக்கு வந்து அங்கு அமைந்துள்ள தீர்த்தங்களில் நீராடி சிவன் மற்றும் ராகுவை மனமுருக வேண்டி, ராகு காலத்தில் ராகுவிற்கு பாலபிஷேகம் செய்து வந்தால் தோஷங்கள் நீங்கும். இக்கோயிலில் அமைந்துள்ள வன்னி மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வேண்டி வந்தால் திருமண தடை நீங்கி உடனடியாக திருமண பாக்கியம் ஏற்படும்.