முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்து சமய அறநிலையத்துறை வேலை..!! அப்ளை பண்ண நீங்க ரெடியா..? விவரம் உள்ளே..!!

11:24 AM May 07, 2024 IST | Chella
Advertisement

இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகிய பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

1 பதவி: உதவி ஆணையர்

காலிப்பணியிடங்கள்: 21

வயதுவரம்பு: 34-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் சட்டப்பிரிவில் 3 ஆண்டு இளங்கலை அல்லது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது குடிமை அல்லது குற்றவியல் வழக்குகளை நடத்தும் அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பயிற்சி வழக்கறிஞராக பயிற்சியில் இருக்க வேண்டும் அல்லது இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை I, II, III,IV அல்லது ஆய்வாளர் அல்லது தலைமை எழுத்தர், கண்காணிப்பாளர் போன்ற பணிகளில் குறைந்தபட்சம் 6 ஆண்டுகளாவது பணிபுரிந்திருக்க வேண்டும்.

2 பதவி: மாவட்டக் கல்வி அலுவலர்

காலிப்பணியிடங்கள்: 8

வயதுவரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் இளங்கலை கற்பித்தல் அல்லது இளங்கலை கல்வியியல் (பி.எட்) முடித்திருக்க வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் படிப்பகளில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.5.2024

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 12.7.2024

மேலும் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/tamil/05_2024_TAM_.pdf

Read More : நீங்க செகண்ட் ஹேண்ட் கார் வாங்கப் போறீங்களா..? அப்படினா இந்த விஷயங்களை செக் பண்ணுங்க..!!

Advertisement
Next Article