முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு ரூ.4,000 அபராதம்...! நீதிமன்றம் உத்தரவு

Hindu People's Party leader Arjun Sampa fined Rs.4,000.
07:53 AM Aug 09, 2024 IST | Vignesh
Advertisement

நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் ரூ.1,001 பரிசு தருவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு ரூ.4,000 அபராதம் .

Advertisement

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி சென்றுக்கொண்டு இருக்கும் போது மீது, அவரை எட்டி உதைத்த சம்பவம் கடந்த 2022-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அந்த சம்பவம் குறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தேவர் ஐயாவை அவமதித்த விஜய் சேதுபதியை யாரேனும் தாக்கினால் அவருக்கு ரூ.1,001 வெகுமதி வழங்கப்படும் எனப் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் ரூ.1,001 பரிசு தருவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு ரூ.4,000 அபராதம் விதித்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
arjun sampathcovaivijay sethupathi
Advertisement
Next Article