இந்தியாவை அதிர வைத்த ஹிண்டன்பெர்க் அறிக்கை..!! அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு?
அதானி குழுமத்தை அம்பலப்படுத்தியதற்காக அறியப்பட்ட பெயர் ஹிண்டன்பர்க் ரிசர்ச். தற்போது இந்தியா சம்பந்தப்பட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டைக் குறிப்பிட்டுள்ளது. ஹிண்டன்பெர்க் என்பது அமெரிக்காவில் செயல்பட்டு வரும் முதலீடு சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனாகும். இதன் முழுப்பெயர் ஹிண்டன்பெர்க் ரீசர்ஜ் எல்எல்சி.
கடந்த ஆண்டு ஜனவரியில், ஹிண்டன்பர்க் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்து லாபம் ஈட்டியதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதானி குடும்பத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் பங்கு மதிப்புகளை உயர்த்தி காட்டி அதானி நிறுவனங்கள் அதி கடன் பெற்று பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஹிண்டன்பர்க்கின் அறிக்கை வெளியான உடனேயே, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் சரிவை சந்தித்தன. இதனையடுத்து, அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் கூற்றுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுத்தது. ஆனால், தங்களது இந்த அறிக்கை தவறானது என்று கருதினால், அதானி குழுமம் தங்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் அழைப்பும் விடுத்திருந்தது.
இந்த குற்றச்சாட்டு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பெரும் பணக்காரரான அதானி குழும பங்குகளின் விலை குறைய தொடங்கியது. ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை என்பது அதானி குழுமத்துக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கியது.
இந்நிலையில் தான் தற்போது ஹிண்டன்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிண்டன்பெர்க் தனது எக்ஸ் பக்கத்தில், "Something big soon India" என தெரிவித்துள்ளது. அதாவது விரைவில் இந்தியா பற்றிய பெரிய விஷயம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை யாரை பற்றியதாக இருக்கும்? எந்த தொழில் அதிபர் அல்லது எந்த பங்கு சந்தை முதலீடு தொடர்பான விபரமாக இருக்கும்? என பல ஊகங்கள் எழுந்துள்ளது.
Read more ; இனி ஆண்களுக்கும் மாதம் ஆயிரம் உதவித்தொகை..!! – அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!