For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி : அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவு..!! முதலீட்டாளர்கள் கண்ணீர்..

Hindenburg Report Aftermath: Adani Group Stocks Down By 4%, Stock Market Takes Hit
10:55 AM Aug 12, 2024 IST | Mari Thangam
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி   அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவு     முதலீட்டாளர்கள் கண்ணீர்
Advertisement

அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(SEBI) தலைவர் மாதபி புச் தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருப்பதாக ஹிண்டன்பர்க் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் 17 சதவீதம் குறைந்துள்ளது.

Advertisement

ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக, அதானி குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. பங்குச் சந்தையில் பங்குஜ்களின் சரிவால், அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.53 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழும நிறுவன பங்குகள் விலை 17 சதவிகிதம் வரை சரிந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகள் விலை 7 சதவிகிதம் சரிந்து ரூ.1,656-க்கு வர்த்தகமாகிறது. அதானி வில்மர் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ்  நிறுவன பங்குகளின் விலை 3 சதவிகிதம் வரை சரிந்துள்ளது. அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்குகள் 13 சதவிகிதம் வரை சரிந்து ரூ.753-க்கு குறைந்துள்ளது.

என்டிடிவி நிறுவன பங்குகளின் மதிப்பு 11 சதவிகிதம் குறைந்து ரூ.186.15 ஆக வீழ்ந்துள்ளது. அதானி பவர் நிறுவன பங்குகளின் விலை 4 சதவிகிதமும் சரிந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக அதானி எனர்ஜி சொல்யூசன் நிறுவனத்தின் பங்குகள் 17.06 சதவிகிதம் வரை சரிந்து, ரூ.915.70-க்கு விற்பனையாகி வருகிறது. 2023 அறிக்கையின் மூலம் ஹிண்டன்பெர்க் அதானி குழுமத்திற்கு சுமார் 100 பில்லியன் டாலர் வரையிலான இழப்பை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், தற்போதைய அறிக்கை முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. பழி தீர்க்க திட்டம் போட்ட ஆம்ஸ்ட்ராங் நண்பன் கைது..!!

Tags :
Advertisement