For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'மார்பக புற்றுநோயால் போராடும் நடிகை' முடியை இழந்த போதும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்திய ஹினா கான்!!

Actor Hina Khan is battling cancer. She shared the news with her fans just a few days back and she has been taking everyone along in her journey to battle the disease.
03:12 PM Jul 04, 2024 IST | Mari Thangam
 மார்பக புற்றுநோயால் போராடும் நடிகை  முடியை இழந்த போதும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்திய ஹினா கான்
Advertisement

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். இவர் யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை, நாகின் 5, பிக் பாஸ் சீசன் 11, கசௌதி ஜிந்தகி கே, நாகின்-5 மற்றும் பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூலம் இவர் பிரபலமடைந்தார்.

Advertisement

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஹினா கான்க்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னதாக அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தான் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனது வாழ்க்கையில் இந்த கடினமான கட்டத்தில் தனது குடும்பத்தினரின் ஆதரவு இருப்பதாகவும் ஹினா பகிர்ந்து கொண்டார். அவர் தனது சமூக ஊடகங்களில் இந்த செய்தியை தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

இந்நிலையில் அவரின் தற்போதைய இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “இந்த உலகத்தில் அழகான பல மனிதர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் இந்த நோயுடன் போராடுவதன் கடினம் எனக்கு தெரியும். தலைமுடி பெண்ணிற்கு மிக அழகு. அது மகுடம் போன்றது. யாரும் அதை வெட்ட விரும்ப மாட்டார்கள். ஆனால் நோயுடன் போராட வேண்டிய சூழலில் அதை இழப்பது கட்டாயமாகியுள்ளது.

நான் இந்த போராட்டத்தில் வெற்றியடையவே விரும்புகிறேன். அதனால் எனக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பில் கூட நான் வெற்றியை நினைக்கிறேன். முடியை இழக்கும் முன்பே அதை வெட்டிவிட முடிவெடுத்தேன். உண்மையான மடுடம் என்பது எனது நம்பிக்கையில் இருக்கிறது. என்னை நான் காதலிக்கிறேன். இந்த கால கட்டத்தில் எனக்கான விக்கினை எனது சொந்த முடியை வைத்தே தயாரிக்க விரும்புகிறேன். தலைமுடி, புருவ முடிகள் மீண்டும் வளரும். வடுகள் மறையும். என் தன்னம்பிக்கை மட்டுமே மாறாதது. எனது பயணத்தை நான் வீடியோவாக பதிவு செய்கிறேன். இது மற்றவர்களுக்கு உற்சாகமாக அமையும் என பதிவிட்டிருந்தார்.

Read more | மூளையை உண்ணும் அமீபாவால் சிறுவன் உயிரிழப்பு.!! பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு – கேரளாவில் சோகம்!

Tags :
Advertisement