முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிக்பாஸ் நடிகைக்கு மார்பக புற்றுநோய்!! இன்ஸ்டா பதிவில் வெளியான தகவல்.. வருந்தும் ரசிகர்கள்!!

Hina Khan diagnosed with stage 3 breast cancer, says 'ready to do everything necessary'
01:46 PM Jun 28, 2024 IST | Mari Thangam
Advertisement

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான்.  இவருக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பகிர்ந்துள்ளார். தான் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனது வாழ்க்கையில் இந்த கடினமான கட்டத்தில் தனது குடும்பத்தினரின் ஆதரவு இருப்பதாகவும் ஹினா பகிர்ந்து கொண்டார். அவர் தனது சமூக ஊடகங்களில் இந்த செய்தியை தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

Advertisement

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் வணக்கம். என்னை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சவாலான நோயறிதல் இருந்த போதிலும் நான் நன்றாக இருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

மேலும், ஏற்கனவே சிகிச்சை தொடங்கிவிட்டது எனவும் தனக்காக பிரார்த்தனை செய்யும் படியும் ரசிகர்களை கேட்டுக் கொண்டார். இவர் யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை, நாகின் 5, பிக் பாஸ் சீசன் 11, கசௌதி ஜிந்தகி கே, நாகின்-5 மற்றும் பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூலம் இவர் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Breast CancerHina KhanTV industry
Advertisement
Next Article