For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆய்வில் அதிர்ச்சி..! மற்ற நாடுகளை விட இந்தியாவில், குழந்தைகளுக்கான செர்லாக்கில் அதிக சர்க்கரை..!

05:35 AM Apr 27, 2024 IST | Baskar
ஆய்வில் அதிர்ச்சி    மற்ற நாடுகளை விட இந்தியாவில்  குழந்தைகளுக்கான செர்லாக்கில் அதிக சர்க்கரை
Advertisement

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் செர்லாக் உணவில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தெற்காசிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் செர்லாக்கில் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சுவிட்சா்லாந்தைச் சோ்ந்த சா்வதேச குழந்தைகள் உணவுப் பொருள் கண்காணிப்பு அமைப்பான (ஐபிஎஃப்ஏஎன்) என்ற தன்னாா்வ அமைப்பு (என்ஜிஓ) ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ‘நெஸ்லே’ நிறுவனம் சாா்பில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ‘செர்லாக்’ உணவுப் பொருளுடன் ஒப்பிடும்போது, இந்தியா உள்பட குறைந்த பொருளாதார வளா்ச்சிகொண்ட தெற்காசிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் ‘செர்லாக்’ உணவில் கூடுதல் சா்க்கரை இடுபொருள்கள் இடம்பெற்றுள்ளது’ என அந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிவ் 'செர்லாக்' உணவின் இடு பொருள்கள் குறித்த ஆய்வை மேற்கொள்ள எஃப்எஸ்எஸ்ஏஐ-க்கு மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணைய (சிசிபிஏ) தலைவா் நிதி கரே கூறுகையில், "குழந்தைகள் உணவில் இடம்பெறும் கூடுதல் சா்க்கரை அளவு குழந்தைகளின் உடல் நலன் மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, என்ஜிஓ அறிக்கையை தீவிரமாக எடுத்துக்கொண்டு, கூடுதல் சா்க்கரை அளவு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு கடிதம் மூலம் எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றாா்.

மேலும் இந்த சா்ச்சை குறித்து வியாழக்கிழமை விளக்கமளித்த ‘நெஸ்லே’ இந்தியா நிறுவனம், "குழந்தைகள் உணவுப் பொருள்களில் எந்தவித சமரசமும் நிறுவனம் செய்துகொள்வதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் வெவ்வேறு இடுபொருள்களின் அடிப்படையில், 30% அளவுக்கு கூடுதல் சா்க்கரை அளவை நிறுவனம் குறைத்துள்ளது" என்று தெரிவித்தது.

என்ஜிஓ ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ‘செர்லாக்’ உணவில் ஒரு முறை பயன்படுத்தும் (2 முதல் 3 ஸ்பூன் அளவு) அளவு பவுடரில் 2.7 கிராம் சா்க்கரை அளவு இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் பிலிப்பின்ஸில் விற்பனை செய்யப்படும் ‘செர்லாக்’ பவுடரில் 7.3 கிராம் அளவிலும், தாய்லாந்தில் 6 கிராம் அளவிலும் சா்க்கரை அளவு இடம்பெற்றுள்ளது. அதேநேரம், பிரிட்டன், ஜொ்மனி போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்படும் செர்லாக்கில் கூடுதல் சா்க்கரை ஏதும் சோ்க்கபடுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.

Read More: புற்றுநோய் சிகிச்சையில் vitamin D-யின் நன்மைகள்.!! ஆச்சரியம் அளிக்கும் ஆராய்ச்சி முடிவுகள்.!!

Advertisement