For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிக சம்பளம் பிடிக்கப்படும்!… 7 மாதங்கள் முன்பே ட்விஸ்ட்!… காலநீட்டிப்பு இருக்காது!… இனிமேல் ஆக்‌ஷன்தான்!

08:08 PM Dec 28, 2023 IST | 1newsnationuser3
அதிக சம்பளம் பிடிக்கப்படும் … 7 மாதங்கள் முன்பே ட்விஸ்ட் … காலநீட்டிப்பு இருக்காது … இனிமேல் ஆக்‌ஷன்தான்
Advertisement

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் எல்லோரும் இருந்தாலும், அலுவலகம் சென்றவுடன் அனைவரும் செய்ய வேண்டியது வருமான வரி கழிப்பதற்கான ஆவணங்களை நிறுவனத்தில் சமர்ப்பிப்பது தான். இதைச் செய்ய மறந்துவிட்டால், அடுத்த 3 மாத சம்பளத்தில் அதிகப்படியான சம்பளத்தை வரியாகப் பிடித்தம் செய்யப்படும். ஒரு குறிப்பிட்ட நிதியாண்டிற்கான ITR படிவங்கள் குறித்த அறிவிப்பை மத்திய நேரடி வரி வாரியம் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் அறிவிக்கப்படும். ஆனால் சமீபத்திய காலத்தில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வருவது வழக்கமாகியுள்ளது, அதுவும் இந்த முறை 7 மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

கடந்த ஆண்டு, பிப்ரவரி 2023 இல் 2022-23 நிதியாண்டுக்கான (AY 2023-24) ஐடிஆர் படிவங்களை வருமான வரித் துறை அறிவித்தது. இந்த ஆண்டு, ஐடிஆர் படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதிக்கு ஏழு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்ட அறிவிப்பில் ஐடிஆர் படிவம் 1 (SAHAJ) மற்றும் ஐடிஆர் படிவம் 4 (SUGAM) ஆகியவற்றை, மதிப்பீட்டு ஆண்டு (AY) 2024-25க்கு ஆண்டு வருமானம் ரூ. 50 லட்சம் வரை உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. இதேபோல் 2023-24 ஆம் நிதியாண்டுக்கு அல்லது 2024-25 ஆம் கணக்கீட்டு ஆண்டுக்கு வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31, 2024 கடைசி நாளாகும் என அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை 7 மாதங்களுக்கு முன்னதாக அறிவிக்க முக்கியக் காரணமாக என்ன..? இந்த வருடம் கால நீட்டிப்பு இருக்காது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு இருக்கலாம். இதனால் 7 மாதத்திற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐடிஆர் படிவம் 1 சஹாஜ் படிவம் ரூ. 50 லட்சம் வரை வருமானம் உள்ள மற்றும் சம்பளம், ஒரு வீட்டுச் சொத்து மூலம் வருமான, பிற ஆதாரங்கள் (வட்டி வருமானம்) மற்றும் ரூ. 5,000 வரை விவசாய வருமானம் மூலம் வருமானம் பெறும் தனிநபர் தாக்கல் செய்யலாம். இதேவேளையில் ஒரு தனிநபருக்கு மூலதன ஆதாயங்கள் பெறுவோர் (குறுகிய கால மற்றும் நீண்ட கால), பட்டியலிடப்படாத ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்தவர்கள், வணிகம் அல்லது தொழிலில் இருந்து வருமானம் உள்ளவர்கள், ஒரு நிறுவனத்தில் இயக்குநராக இருக்கும் எந்தவொரு தனிநபராலும் ஐடிஆர் படிவம் 1 சஹாஜ் படிவத்தைத் தாக்கல் செய்ய முடியாது.

ஐடிஆர் படிவம் 4 (சுகம்) என்பது சிறிய மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கான எளிய வடிவமாகும். இந்தப் படிவத்தை மொத்த வருமானம் ₹50 லட்சம், வணிகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் உள்ள தனிநபர்கள், HUFகள் மற்றும் நிறுவனங்கள் (LLP அல்லாத நிறுவனங்கள்) சுகம் படிவத்தைத் தாக்கல் செய்யலாம். இதேபோல் ஒரு வீட்டுக்கு மேல் வருமானம் உள்ள நபர்கள், ESOP மூலம் வரிச் சலுகை பெற்ற தனிநபர், நிறுவனங்கள், HUF, நிறுவனத்தில் டைரெக்டர் பதவியில் இருப்போர் ஐடிஆர் படிவம் 4 (சுகம்) தாக்கல் செய்ய முடியாது.

Tags :
Advertisement