For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மத்திய அரசு எச்சரிக்கை..! சாம்சங் கேலக்ஸி மொபைல் பயனர்களுக்கு அதிக ஆபத்து!…

08:27 AM Dec 15, 2023 IST | 1newsnationuser3
மத்திய அரசு எச்சரிக்கை    சாம்சங் கேலக்ஸி மொபைல் பயனர்களுக்கு அதிக ஆபத்து …
Advertisement

பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு மத்திய அரசின் கம்ப்யுட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In)எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக CERT-In வெளியிட்டுள்ள குறிப்பில், CIVIN-2023-0360-இல் ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 ஒ.எஸ். கொண்ட சாம்சங் மொபைல்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாடுகள் ஹேக்கர்களுக்கு பயனர்களின் மிகமுக்கிய தகவல்களை அபகரிக்கும் வசதியை வழங்க வாய்ப்பளிக்கும் என்று CERT-In ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். சாம்சங் சாதனங்களில் இந்த குறைபாடுகள் பல வகைகளில் ஆபத்தை விளைவிக்கும் என்று CERT-In அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இவை ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 ஒ.எஸ். கொண்டிருக்கும் சாம்சங் சாதனங்கள் மற்றும் சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ், கேலக்ஸி ஃப்ளிப் 5, கேலக்ஸி ஃபோல்டு 5 மற்றும் பல்வேறு மாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இதில் பார்க்கலாம். சாம்சங் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் செக்யுரிட்டி அப்டேட்களை பயனர்கள் தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும். சாதனத்தில் அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள செட்டிங்ஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் -- டவுன்லோட் அன்ட் இன்ஸ்டால் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

அப்டேட் இன்ஸ்டால் செய்யும் வரை, பயனர்கள் பாதிக்கப்பட்ட சாதனங்களில் முன்பின் தெரியாத செயலிகளை இயக்கும் போது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். சாதனத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகள் அனைத்தையும் தொடர்ந்து அப்டேட் செய்ய வேண்டும். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டுமே செயலிகளை இன்ஸ்டால் செய்யவேண்டும். மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோட், இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும். அறிமுகமில்லாதவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் மற்றும் குறுந்தகவல்களை க்ளிக் செய்ய வேண்டாம். இந்த இணைய முகவரிகள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடும் வலைதளத்திற்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

Tags :
Advertisement