அனைத்திற்கும் அரசியல் சாயம் பூச வேண்டாம்.. TNUSRB தலைவர் நியமனத்திற்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி..!!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என அதிமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக சுனில்குமார் செயல்பட தடை விதிக்க வேண்டும். எந்த தகுதியின் அடிப்படையில் சுனில் குமார் அந்த பதவிக்கு வந்துள்ளார்? என விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது தகுதியான பலர் இருக்கும் போது, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியை தேர்வு வாரிய தலைவராக நியமிக்க முடியாது? என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து சுனில்குமார் பதிலளிக்க உத்தரவிட்டது, விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு இன்று பட்டியிலப்படாத நிலையில் மனுதாரதர் தரப்பில் நீதிபதி வி.பவானி சுப்பராயன் முறையிடப்பட்டது. அப்போது, பதில் மனுத்தாக்கல் செய்து விட்டதா? என்பது குறித்து கேட்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கை பட்டியலிடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என கூறினார்.
மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், நியமிக்கப்பட்ட நபர் தகுதி இல்லாத நபராக இருந்தால் மட்டுமே தலையிட முடியாது என்ற அரசின் கொள்கை முடிவில் எவ்வாறு தலையிட முடியும் எனக் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கை உடனடியாக நீதிபதி விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடாது எனக்கூறிய அனைத்திற்கும் அரசியல் சாயம் பூச வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
Read more ; TN Govt Jobs : தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலை.. சென்னையில் பணி..!!