For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரபரப்பு...! முன்னாள் அமைச்சர் மீதான பண மோசடி வழக்கு...! சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

High Court orders transfer of money laundering case against former minister to CBI
05:28 AM Jan 07, 2025 IST | Vignesh
பரபரப்பு     முன்னாள் அமைச்சர் மீதான பண மோசடி வழக்கு     சிபிஐ க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு
Advertisement

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பண மோசடி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகப் பதவி வகித்த கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக முன்னாள் நிர்வாகியான விஜய நல்லதம்பி ஆகியோர் ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவீந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால், அவருக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் நிலுவையில் இருந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. தமிழக போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அமல்படுத்த நேரமில்லாத காரணத்தால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிறேன். எனவே, விருதுநகர் மாவட்ட காவல்துறை, இந்த வழக்கு ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags :
Advertisement