முதல் திருமணத்தை மறைத்து இன்ஸ்டா காதலியுடன் உல்லாசம்..!! வலையில் சிக்கிய கோவை பெண்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!
கோவை மாவட்டம் சரவணம்பட்டி - துடியலுர் செல்லும் சாலையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் 28 வயது இளம்பெண் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் திருப்பூர் மாவட்டம் தெக்கலூரை சேர்ந்த அருண்பிரகாஷ் (வயது 30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அருண்பிரகாஷின் வசீகரிக பேச்சால் மயங்கிய இளம்பெண், நாளடைவில் அவரை காதலிக்க தொடங்கினார். அருண்பிரகாஷும் அந்த பெண்ணிடம் பல ஆசைவார்த்தைகளை கூறி நெருக்கமாக இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். திடீரென அருண் பிரகாஷின் நடவடிக்கையில் இளம்பெண்ணுக்கு சந்தேகம் வந்தது. இதனால், இளம்பெண் அவரை கண்காணிக்க தொடங்கினார். அப்போது தான் அருண்பிரகாஷுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐடி பெண், அருண்பிரகாஷ் உடனான நட்பை துண்டித்தார். இதனால் அதிர்ந்து போன அருண்பிரகாஷ், தான் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனாலும் அந்த பெண், அருணிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். சம்பவத்தன்று அருண்பிரகாஷ், அந்த பெண்ணை சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அருண்பிரகாஷ், இளம்பெண்ணின் செல்போனை பிடுங்கி உடைத்ததுடன் இரும்பு கம்பியால் அடித்து மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர், சம்பவம் குறித்து கோவை துடியலூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான அருண்பிரகாசை தேடி வருகின்றனர்.