மாணவிகளின் குளியலறையில் ரகசிய கேமரா..!! 300 வீடியோக்கள்..!! மாஜி அமைச்சருக்கு சொந்தமான கல்லூரியில் பரபரப்பு சம்பவம்..!!
முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான கல்லூரி விடுதியில், மாணவிகளின் குளியலறையில் கேமராக்கள் வைத்து ஆபாசமாக வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் மல்லாரெட்டி. இவர், தற்போது எம்எல்ஏவாக உள்ள நிலையில், இவருக்கு சொந்தமாக மெட்சல் நகரில் இன்ஜினியரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மாணவிகளுக்கு தனியாக விடுதி உள்ளது. இந்நிலையில், மாணவிகளின் குளியலறையில் கேமராக்கள் வைத்து ஆபாச வீடியோகள் எடுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் விடுதி வளாகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் அங்கு வந்து மாணவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது மாணவ, மாணவிகள், 'சுமார் 300 மாணவிகளின் வீடியோக்களை ஆபாசமாக பதிவு செய்துள்ளதாகவும், அந்த வீடியோக்கள் வெளியே கசிந்தால் எம்எல்ஏ மல்லாரெட்டி தான் பொறுப்பேற்க வேண்டும்' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, விடுதி ஊழியர்களிடம் இருந்து 12 பேரின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், சமையல் ஊழியர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இதனால், சமையல் ஊழியர்கள் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : மாதம் ரூ.55,000 வரை சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! இன்றே கடைசி நாள்..!! உடனே இந்த வேலையை முடிங்க..!!