முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’ஏய் கண்ணாடி சும்மா இருயா’..!! ’எனக்குனே வருவீங்களா’..? மேடையில் டென்ஷன் ஆன திமுக மாஜி அமைச்சர் நாசர்..!!

Nasser condemned the party administrator with some kind of annoyance as you were talking about why you were talking about the mirror.
07:47 AM Sep 06, 2024 IST | Chella
Advertisement

திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆவடி எம்.எல்.ஏ நாசர், பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், கடந்த 2 எம்.பி தேர்தல்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறித்து நிர்வாகிகள் மத்தியில் நாசர் பேசி கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது, மேடையின் பக்கவாட்டில் கட்சியினர் சிலர் பேசிக் கொண்டிருந்ததால் சத்தம் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாசர், அவரை நோக்கி ஒருமையில் கண்டித்தார். ’ஏய் கண்ணாடி சும்மா இருயா, இங்க பேசிட்டு இருக்கும் போது நீ ஏன் பேசுற, இங்க வந்து பேசு’ என ஒருவகையான எரிச்சலுடன் மைக்கில் கட்சி நிர்வாகியை கண்டித்தார்.

தொடர்ந்து நாசர் மேடையில் பேசி கொண்டிருந்த போது, இரண்டு முறை மின் தடை ஏற்பட்டது. அனைத்து விளக்குகளும் அணைந்து இருள் சூழ்ந்தது. தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சிறிது நேரம் பேச்சை நிறுத்திய நாசர் மைக்கை தட்டி, தட்டி பார்த்து விட்டு மின்சாரம் கூட தமக்கு வினையாக வருவதாக ஆதங்கம் தெரிவித்தார்.

இவ்வளவு நேரம் எம்எல்ஏ கிருஷ்ணசாமி பேசிய போதோ அல்லது ராஜேந்திரன் பேசிய போதோ மின் தடை ஏற்படவில்லை. தனக்கு தான் தடையாக வர வேண்டுமா என தெரிவித்தார். திருவள்ளூரில் நாற்காலி கொண்டு வர தாமதமானதால் கட்சி நிர்வாகி மீது கல் எறிந்தது, திருத்தணியில் மைக்கை தட்டிவிட்டதாக எம்.எல்.ஏ. உதவியாளரை மேடையில் தாக்கியது என பொது இடங்களில் அத்துமீறி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நாசரின், பால்வளத்துறை அமைச்சர் பதவி கடந்தாண்டு மே மாதம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More : ’நைட்டு 11 மணிக்கு வர்றேன்’..!! பள்ளி மாணவியிடம் அத்துமீறி ஆசிரியர்..!! பாய்ந்தது போக்சோ..!!

Tags :
திமுக முன்னாள் அமைச்சர் நாசர்திருவள்ளூர் மாவட்டம்பால்வளத்துறை
Advertisement
Next Article