பிக் பாஸ் வீட்டில் சிவகார்த்திக்கேயன்.. தேசியக் கொடியை பிளர் செய்த விஜய் டிவி..!! என்ன காரணம்?
பிக் பாஸ் எபிசோடில் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து தனது அமரன் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை போட்டுக் காட்டினார். அந்த படத்தை பற்றியும் மேஜர் முகுந்த் வரதராஜன் மனைவி மற்றும் பெற்றோர்கள் என்ன சொன்னார்கள் என்பது குறித்தும் பேசினார். கடைசியாக போட்டியாளர்கள் அனைவருக்கும் தேசியக் கொடி பேட்ஜ் கொடுக்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் உள்பட அனைவரும் அதை அணிந்துக் கொண்டு நின்றனர்.
அந்த காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் போது அனைவர் நெஞ்சிலும் பேட்ஜ் இருந்த இடம் பிளர் செய்யப்பட்டது ரசிகர்களை ஷாக் ஆக்கியது. தேசியக் கொடியை பிக் பாஸ் டீம் ஏன் பிளர் செய்ய வேண்டும் என்றும் இதில் என்ன தவறு என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வீட்டில் ஏன் தேசியக் கொடி மறைக்கப்பட்டதற்கான காரணங்கள் என்னவென்று வெளியாயிருக்கிறது.
அதாவது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இணங்க மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) உத்தரவுப்படி, திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் தேசியக் கொடியை இடம்பெறச் செய்ய விரும்பினால், உள்துறை அமைச்சகத்திடம் (MHA) முன் அனுமதி பெற வேண்டும்.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் கதைக்குள் கொடியைச் சேர்ப்பதன் அவசியத்தை நியாயப்படுத்த வேண்டும் மற்றும் கொடி மற்றும் கொடிக் கம்பம் பரிமாணங்கள் தொடர்பான சட்ட விவரக்குறிப்புகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும். காட்டப்படும் கொடி, இந்திய தேசியக் கொடியின் காட்சியைக் கட்டுப்படுத்தும் கொடிக் குறியீட்டையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்திய மூவர்ணக் கொடி நீளம் மற்றும் உயரம் 3:2 என்ற விகிதத்தில் செவ்வக வடிவில் இருக்க வேண்டும் என்று கொடி குறியீடு கூறுகிறது.
நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் எம்ஹெச்ஏவிடம் அனுமதி பெறாமல் இருப்பதாலும், சிவகார்த்திகேயன் மற்றும் போட்டியாளர்கள் அணிந்திருந்த இந்தியக் கொடி பேட்ஜும் வட்ட வடிவில் இருப்பதால் கொடிக் குறியீட்டை உறுதிப்படுத்தாததால், அது பிளர் செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு, சிவராஜ்குமார் நடித்த 'மாஸ் லீடர்' என்ற கன்னடப் படத்தில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் ராணுவ அதிகாரியைப் பற்றிய ஒரு திரைப்படம், உள்துறை அமைச்சகத்திடம் தேவையான அனுமதியைப் பெறாததால், தோன்றும் அனைத்து காட்சிகளிலும் மூவர்ணக் கொடியை மங்கலாக்கியது குறிப்பிடத்தக்கது.
Read more ; வெள்ளியங்கிரி மலை ஏற அரசுக்கு ரூ. 5353 கட்டணம்..!! – கொந்தளித்த பாஜக