இவர்களெல்லாம் நெய் சேர்ப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.. எவ்வளவு சேர்த்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது?
இந்திய பாரம்பரிய உணவுகளின் இடத்தில் நெய்க்கு மிக முக்கிய இடமுண்டு. பழங்காலம் தொட்டு இன்று வரை இந்திய உணவுகளின் முக்கியமானதாக உள்ளது நெய். நீங்கள் சாப்பிடக்கூடிய எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு கூடுதல் சுவை அளிக்கும். இதோடு உங்களது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சமீப காலங்களில் நெய் சாப்பிட்டால் எடை கூடும். கொலஸ்டிரால் அதிகரிக்கும் என சொல்லப்படுகின்றன. அதற்கான காரணம் என்ன, நாம் நெய்யை பயன்படுத்தும் முறை சரியானது தானா போன்றவற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
எந்த அளவு நெய் சேர்க்க வேண்டும்? மதிய உணவில் அரை டீஸ்பூன் அளவுக்குச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. சாப்பாட்டின் முதல் கைப்பிடி எடுக்கும்போது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட வேண்டும். இதனோடு கட்டாயமாக உப்புச் சேர்க்க வேண்டும். உப்பில்லாமல் நெய் மட்டும் சேர்த்துச் சாப்பிடவே கூடாது. அதேபோல உணவு முழுக்க நெய் சேர்க்கத் தேவையில்லை. முதல் கைப்பிடி உணவில் மட்டும் நெய் இருந்தால் போதும்.
எண்ணெய்க்கு பதிலாக, நெய் ஊற்றி தோசை செய்தால் மிக மிகக் குறைந்த அளவில் தான் நெய் சேர்க்க வேண்டும். அதேபோல மதிய உணவில் மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு உணவில் சேர்த்தால், செரிமானமாக தாமதமாகும். சூடாக சமைத்த உணவில் மட்டுமே நெய் சேர்க்க வேண்டும். சூடு இல்லாத ஆறிப்போன உணவுகளில் நிச்சயம் நெய்யை கலக்கக் கூடாது
நெய் சாப்பிடுவதன் நன்மைகள் : உங்களது உணவில் நீங்கள் நெய் சேர்த்துக்கொள்ளும் போது ஏராளமான நன்மைகளை நீங்கள் அடைவீர்கள். குறிப்பாக காலையில் சாப்பிடும் உணவில் சிறிதளவு நெய் ஊற்றி சாப்பிடும் போது உடலுக்கு குளிர்ச்சியை அளித்து உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் நினைவுத்திறன் அதிகரிக்கிறது.
நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்திருப்பதால் உடலுக்கு நன்மை அளிக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற சத்துக்களை வெளியேற்றவும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவியாக உள்ளது. நெய் மலச்சிக்கலை தீர்ப்பதற்கு மிகச் சிறப்பாக மருந்தாகச் செயல்படுகிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது நம்முடைய செரிமான மண்டலத்தைச் சுத்தப்படுத்தி, மலச்சிக்கலைப் போக்க உதவும்.
நெய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நம்முடைய சருமத்தையும் இளமையாக தோலை பளபளப்பாகவும் வைத்திருக்கச் செய்யும்.. நினைவாற்றவை மேம்படுத்தச் செய்யும் பண்பு கொண்டது. அதனால் தினமும் சிறிதளவு குழற்தைகளுக்கு உணவோடு நெய் சேர்க்கலாம்.
யாரெல்லாம் நெய் சாப்பிட கூடாது?
செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள், குறிப்பாக அஜீரணக் கோளாறு, irritable bowel syndrome மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயம் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வீக்கம், குமட்டல் மற்றும் அஜீரணம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். இது பித்தப்பை பிரச்சினைகள், நாள்பட்ட செரிமான பிரச்சனைகள், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் பிற இரைப்பை குடல் கோளாறுகள் போன்ற நிலைமைகளை மோசமாக்கும்.
எடை மேலாண்மை : உடல் எடையை குறைக்கவும், ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நெய்யில் அதிக அளவு கொழுப்பு உள்ளதால், அதை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இருப்பினும், நெய்யை மிதமான அளவில் சேர்த்துக் கொள்வது, தேவையற்ற பசியைக் கட்டுப்படுத்த உதவும். உங்கள் எடையை பராமரிக்க கலோரி கட்டுப்படுத்தப்பட்ட உணவை எடுக்க வேண்டும்.
கல்லீரல் நோய்கள் : கல்லீரல் நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் நெய்யில் அதிக கொழுப்பு உள்ளது, இது உங்கள் கல்லீரலை கஷ்டப்படுத்தி உங்கள் நிலையை மோசமாக்கும். ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அதிக நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்ளல் கல்லீரலை மோசமாக பாதிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் நெய் சேர்க்கலாமா? காய்ச்சல் போன்ற பருவ தொற்றுக்கள் ஏற்படும் காலங்களில் நெய் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நெய்க்கு கபத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதனால் மழைக்காலத்தில் நெய் சாப்பிடுவதை தவிருங்கள். கர்ப்பிணிகள் நெய் சாப்பிடும் போது இரட்டிப்பு கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் உடல் பருமனாக இருந்தால், நெய் உட்கொள்வதை குறைக்கவும். கல்லீரல் ஈரல் அழற்சி, மண்ணீரல், ஹெபடோமேகலி, ஹெபடைடிஸ் போன்ற கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களில் நெய் தவிர்க்கப்பட வேண்டும்.
Read more ; எச்சரிக்கை.. எனர்ஜி பானம் குடிப்பவரா நீங்கள்? 24 மணி நேரத்திற்குள் உங்கள் உடலுக்கு என்ன நடக்கும் தெரியுமா?