முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வந்தாச்சு சூப்பர் செயலி..!! கடன் முதல் முதலீடு வரை..!! ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட செம அறிவிப்பு..!!

Reliance Industries has launched a payment app called Jio Finance.
07:58 AM Oct 17, 2024 IST | Chella
Advertisement

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ ஃபைனான்ஸ் என்ற கட்டண செயலியை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கும் ஜியோ பைனான்ஸ் செயலி தற்போது பிளே ஸ்டோர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் கடன் வாங்குவது, மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது, வீட்டு கடன்கள், சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுவது உள்ளிட்ட அனைத்து வகையான நிதி சேவைகளையும் பெற முடியும்.

Advertisement

அதுமட்டுமின்றி, ஜியோ டிஜிட்டல் முறையில் சேமிப்பு கணக்கையும் பைனான்ஸ் செயலி மூலம் துவங்க முடியும். பயோமெட்ரிக் அடையாள சரிபார்ப்பு, டெபிட் கார்டுகள் உள்ளிட்டவற்றையும் இதன் மூலமாக பெறலாம். யுபிஐ பேமென்ட், மொபைல் ரீசார்ஜ் மற்றும் பிற கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட அனைத்து நிதி சார்ந்த சேவைகளையும் ஜியோ ஃபைனான்ஸ் செயலி மூலமாக செய்ய முடியும்.

ஜியோ ஃபைனான்ஸை வங்கிக் கணக்குடன் இணைப்பதன் மூலம் பல வங்கிச் சேவைகளை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். பல்வேறு விதமான வங்கி சார்ந்த தகவல்களை இந்த செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் 24 காப்பீடு திட்டங்களையும் ஜியோ பைனான்ஸ் செயலி மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வாகன காப்பீடுகளை டிஜிட்டல் முறையிலேயே இந்த செயலி மூலமாக பெறலாம் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More : இன்று 13 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு..!! மிக கனமழை எங்கு பெய்யும்..? வானிலை மையம் எச்சரிக்கை..!!

Tags :
கடன்முதலீடுஜியோ ரிலையன்ஸ்
Advertisement
Next Article