வந்தாச்சு PAN 2.0!. QR கோடு அம்சத்துடன் அறிமுகம்!. மத்திய அரசு அதிரடி
PAN 2.0: மத்திய அரசின் முதன்மைத் திட்டமான டிஜிட்டல் இந்தியாவுக்கு ஏற்ப, வருமான வரித் துறையின் பான் 2.0 திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் குடிமக்கள் க்யூஆர் குறியீடு அம்சத்துடன் கூடிய புதிய பான் கார்டை விரைவில் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்னா விடுத்துள்ள அறிவிப்பில், பான் 2.0 ப்ராஜெக்ட்டின் கீழ் க்யூஆர் கோட் உடனான பான் கார்டு (PAN Card with QR Code) வழங்கப்படும் மற்றும் இந்த மேம்படுத்தல் செயல்முறை ஆனது முற்றிலும் இலவசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ரூ.1,435 கோடி செலவின் கீழ் உருவாகும் இந்த பான் 2.0 திட்டம், வரி செலுத்துவோர் பதிவுச் சேவைகளின் வணிகச் செயல்முறைகளை மறு-பொறியமைப்பதற்கான மின்-ஆளுமைத் திட்டம், PAN 2.0 என்பது தற்போதைய PAN/TAN 1.0 சுற்றுச்சூழல் அமைப்பின் மேம்படுத்தலாக இருக்கும்.
இது முக்கிய மற்றும் முக்கிய அல்லாத PAN/TAN செயல்பாடுகள் மற்றும் PAN சரிபார்ப்பு சேவையை ஒருங்கிணைக்கும். வரி செலுத்துவோரின் மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்திற்காக PAN/TAN சேவைகளின் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை இது உறுதி செய்யும். மேலும் இதற்காக ஒரு ஒருங்கிணைந்த போர்டல் (Unified porta) உருவாக்கப்படும் என்றும். அது முற்றிலும் காகிதமற்ற (Paperless) செயல்முறைகளை.. அதாவது முழுக்க முழுக்க ஆன்லைன் செயல்முறையை (Online Process) கொண்டிருக்கும்; மேலும் குறை தீர்க்கும் முறைக்கு (Grievance redressal system) முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த அம்சத்தால் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? உங்களின் தற்போதைய பான் கார்டு செல்லாததா? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழும். அதற்கு பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பான் எண்ணை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். புதிய அட்டை QR குறியீடு போன்ற அம்சங்களுடன் செயல்படுத்தப்படும். பான் டேட்டாவை பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும் பான் டேட்டா வால்ட் சிஸ்டம் (PAN data vault system) கட்டாயமாக்கப்படும் என்றும், இதனால் நுகர்வோர் வழங்கும் டேட்டா பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.