உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமா.? அற்புதமான பாட்டி வைத்தியம் இதோ.!
ஆரோக்கியமான வாழ்வு என்பது அனைவரின் இலக்காக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் நோயற்ற ஆரோக்கியமான மற்றும் நிம்மதியான வாழ்வையே விரும்புகிறான். நோய் நொடிகள் என்பவை வாழ்வின் ஒரு பகுதியாகும். இவற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கும் ஆரோக்கியமான வாழ்வை வழிநடத்தவும் நமது முன்னோர்கள் ஏராளமான கை வைத்திய குறிப்புகளை நமக்காக விட்டுச் சென்றுள்ளனர். அவற்றில் சில குறிப்புகளை இந்த பதிவில் காணலாம்.
பல் வலி மற்றும் பல் ஆடும் பிரச்சினை இருந்தால் கடுக்காய் கசாயம் வைத்து அதில் வாய் கொப்பளிக்க வேண்டும். தினமும் இதைச் செய்து வர நிவாரணம் கிடைக்கும். வெந்தயத்தை நெய்யில் நன்றாக வறுத்து அதனை பொடி செய்து மோருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குணமாகும். கரும்பு சர்க்கரையை எரித்து சாம்பலாக்கி அந்த சாம்பலை வெண்ணெயுடன் கலந்து உதட்டில் தேய்த்துவர உதடு வெடிப்பு பிரச்சனை குணமாகும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு விக்கல் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.
கருவேப்பிலை சீரகம் மற்றும் இஞ்சி மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கும். தீராத தலைவலி குணமாகுவதற்கு துளசி இலை, சுக்கு மற்றும் லவங்க பட்டை மூன்றையும் அரைத்து பத்து போட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வேப்ப மரத்தின் இலைகளை அரைத்து துவையல் போல் உட்கொண்டு வர உடலில் இருக்கும் அரிப்புகள் நீங்குவதோடு கிருமி தொற்றுக்களும் குணமாகும். ஓமத்தை நன்றாக வறுத்து அதனை துணியில் கட்டி சிறு குழந்தைகளை சுவாசிக்க செய்தால் நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமலுக்கு தீர்வு கிடைக்கும்.