இனி இவர்களுக்கும் TNPSC குரூப் தேர்வில் 20% இட ஒதுக்கீடு...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
12-ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2019-ஆம் நடத்திய குரூப் 1 தோ்வில் தொலை நிலைக் கல்வியில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை வழங்கியது. இதனை தொலைநிலைக் கல்வியில் படித்தவர்களுக்கு வழங்குவது சட்டவிரோதம் ஆகும். இந்த நிலையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டில் தனது பெயரையும் சேர்க்க வேண்டும் என சத்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியதால் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது என கூறி இருந்தார். மனுவை நேற்று விசாரணைக்கு வந்தது தமிழ் வழியில் படித்தபோதும் குடும்ப சூழலால் 12-ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக தமிழ் வழியில் எழுதியுள்ளார். தமிழ் வழியில் படித்த சான்றிதழும் பெற்றிருக்கிறார் என்பதால் இடஒதுக்கீடு பெற அவருக்கு தகுதி உள்ளது என தெரிவித்த நீதிபதி, திருப்பூரில் ஊரக வளர்ச்சித்துறை உதவியாளராக தேர்வான மனுதாரருக்கு நியமன உத்தரவு வழங்கவும் உத்தரவிட்டார்.