For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஹேமா கமிட்டி அறிக்கை..!! மௌனம் காக்கும் கமல், சிம்பு, தனுஷ்..!! நடிகர்களை வெச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்..!!

Blue Shirt Maran, who published on his X site page, has criticized that the heroes are asking to save them.
02:21 PM Sep 02, 2024 IST | Chella
ஹேமா கமிட்டி அறிக்கை     மௌனம் காக்கும் கமல்  சிம்பு  தனுஷ்     நடிகர்களை வெச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்
Advertisement

கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கைதான் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்திடம் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்று கூறினார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் அர்ஜுனும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உலகின் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை பிரச்சனை இருக்கிறது. அனைத்து இடங்களிலும் சினிமா ஹீரோ சென்று காப்பாற்ற முடியாது. அனைவருக்கும் இந்த விஷயத்தில் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அப்பாவி பெண்கள் நிறைய பேர் பாதிக்கப்படுவதால், நீதிமன்றம் மூலம் மட்டுமே இதற்கு நியாயம் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அர்ஜுனின் இந்த பேட்டியை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், ”அவர்களை காப்பாற்ற சொல்வதே ஹீரோக்கள் கிட்ட இருந்துதான் என்று விமர்சித்துள்ளார். அனைத்து இடங்களிலும் சினிமா ஹீரோக்கள் சென்று காப்பாற்ற முடியாது என்ற அர்ஜுனின் கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதில் கொடுத்துள்ளார். தொடர்ந்து இந்த விஷயத்தில் அடுத்தடுத்த பதிவுகளை வெளியிட்டு வரும் அவர் ஹேமா கமிட்டி குறித்து இன்னும் கேள்வி கேட்கப்படாத நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, நகுல் என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : அளவுக்கு மீறி தண்ணீர் குடித்தால் மரணம் கூட நிகழும்..!! ஆரோக்கியமாக இருக்க இதை பண்ணுங்க..!!

Tags :
Advertisement