For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வெளுத்து வாங்கும் கனமழை..!! மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது..!! வெளியான எச்சரிக்கை..!!

Fisheries officials have advised fishermen in the Nagapattinam district not to go fishing in the sea until further notice.
01:17 PM Dec 11, 2024 IST | Chella
வெளுத்து வாங்கும் கனமழை     மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது     வெளியான எச்சரிக்கை
Advertisement

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அந்த பட்டியலில் நாகையும் இடம்பிடித்துள்ளது.

Advertisement

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து நாகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. அம்பல், திருமருகல், குத்தாலம், நரிமணம், நடுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலில் சூறைக்காற்று வீசுவதாலும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாலும் நாகை மாவட்டத்தில் இருக்க கூடிய மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரக்கணக்கன ஃபைபர் படகுகள் கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Read More : எமனுக்காக ஏற்றப்படும் ”பரணி தீபம்”..!! நீங்கள் செய்த பாவங்கள் போக்க வீட்டில் நாளை இப்படி விளக்கேற்றுங்கள்..!!

Tags :
Advertisement