முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிகனமழை எச்சரிக்கை.. தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை..!! - மாவட்ட ஆட்சியர்

Heavy rain warning.. Half day holiday for Tenkasi district schools..!! - District Collector
01:50 PM Dec 12, 2024 IST | Mari Thangam
Advertisement

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

Advertisement

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

இந்த நிலையில் தமிழகத்தின் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு அதிகமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இன்று பிற்பகல் நடைபெற இருந்த தேர்வுகள் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more ; தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! – வானிலை ஆய்வு மையம்

Tags :
Heavy rainHeavy rain alertschoolsTenkasi
Advertisement
Next Article