For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!! முன்னெச்சரிக்கை தீவிரம்!! மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த கடிதம்!!

05:30 AM May 16, 2024 IST | Baskar
4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை   முன்னெச்சரிக்கை தீவிரம்   மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த கடிதம்
Advertisement

அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சார்பில் அவசர கடிதம் என்பது எழுதப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தில் கோடை மழை என்பது பெய்ய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் கத்திரி வெயிலில் இருந்து தப்பித்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களில் மழை பெய்து கோடை வெயிலுக்கு பதில் குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

இதற்கிடையே தான் தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை என்பது விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம் என்பது எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கனமழையை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மே 19ம் தேதி தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழையை சமாளிக்க ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளையும் இணைத்து மழையில் மக்கள் பாதிக்காத வகையில் தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை துறை தயாராக உள்ளது. ஆனாலும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும். கனமழை பாதிப்பு தொடர்பாக அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். இதையடுத்து மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். கனமழை எச்சரிக்கையால் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு நடவடிக்கையின் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர கடிதம் என்பது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர். கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதப்பட்டுள்ளது. இந்த அவசர கடிதத்துக்கு முக்கிய காரணம் என்பது வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை தான் காரணம்.

அதாவது வானிலை ஆய்வு மையம் சார்பில் மே 19 வரை அநேக இடங்களில் லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்து இருந்தது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 17ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்

மே 18 ம் தேதியை பொறுத்தவரை தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,தினப்பத்தூர். கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 19ம் தேதியை பொறுத்தவரை தமிழகத்தின் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ரிஸ இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம். விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: ‘தியேட்டர்கள் அடுத்த 10 நாட்கள் மூடல்..!’ ரசிகர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?

Advertisement