முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கனமழை : "பதறும் காலம் மாறிவிட்டது" அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..!

12:38 PM Nov 04, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழையும், சில நேரங்களில் கன மழையும் பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்திற்கு ஊன்இன்று ஆரஞ்சு அலர்ட்டும் கொடுத்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மலை பெய்து வருகிறது.

Advertisement

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்கு காரணம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்! தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும். மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க #DravidianModel அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Heavy rain: "Times of worry have changed" Chief Minister Stalin's important announcement to ministers..!stalin about rain situationstalin dmkமுதல்வர் ஸ்டாலின்முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
Advertisement
Next Article