கதிகலங்க வைக்கும் கனமழை..!! மக்களே இதை பத்திரமா வச்சிக்கோங்க..!! வெளியான எச்சரிக்கை..!!
150 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்துள்ள பெருமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 93.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக அதி கனமழை பெய்து வருகிறது. மழை இடைவிடாது கொட்டிக்கொண்டே இருப்பதால் தென் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறிவருகின்றன. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத பெருமழை பெய்துள்ளது. மேலும், மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிகனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
* நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
* நிவாரண முகாம்களில் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
* பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்களையும், போதுமான படகுகளையும் நிலைநிறுத்த வேண்டும்.
* ரொட்டி, பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், பால் பவுடர் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
* மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கான அறிவுரை
* தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
* முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
* நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
* ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் செல் ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
* அவசர உதவிக்கு மாநில அவசரகால செயல்பாட்டு மையம் -1070, வாட்ஸ் அப் எண் - 94458 69848, மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் - 1077 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.