வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! இந்த மாவட்டங்களுக்கு அலர்ட்..!! மக்களே உஷார்..!!
தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக உள் மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
வரும் 13ஆம் தேதியான நாளை கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், 17ஆம் தேதி வரை இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Read More : மாதந்தோறும் வருமானம்..!! வட்டி எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!