கொங்கு மாவட்டங்களை சுத்துப் போட்ட பெருமழை..!! இன்று 9 மாவட்டங்களில் பயங்கர சம்பவம் இருக்கு..!! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!!
தென் மாநிலங்களில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் கொங்கு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாது கொட்டிய மழையால், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, பெங்களூருவில் கட்டுமானப் பணியின்போது, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இன்று பரவலாக மழை பெய்யும். கொங்கு மேற்கு, தென் தமிழகத்தின் உள் மாவட்டங்கள், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பெங்களூருதான் ஹாட் ஸ்பாட்டாக இருக்கும் என்றும் அங்கு நல்ல மழை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : கவிழ்ந்த லாரியில் எரிபொருள் சேகரிப்பு..!! வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 181ஆக உயர்வு..!!